சாலிகிராம எனும் இடம் உடுப்பி மாவட்ட த்தில் NH 17 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. குரு நரசிம்மாவுக்கான ஒரு பெரிய கோயில் இங்கு உள்ளது. இது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஐதீகப்படி நாரத முனிவர் குரு நரசிம்மருக்காக இந்த இடத்தில் ஒரு சிலையை ஸ்தாபித்து வழிபட்ட தாகவும் அது பின்னாளில் இந்தக் கோயிலாக மாறியதாகவும் நம்பப்படுகிறது.
வருடாந்திர தேரோட்ட விழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ஏராளமான பக்தர்கள் கர்நாடக மாநிலம் மட்டுமன்றி அயல் மாநிலங்களிலிருந்தும் வந்து இங்கு குவிகின்றனர்.இந்த ஸ்தலம் ஏறக்குறைய உடுப்பிக்கும் குண்டப்பூருக்கும் மத்தியில் அமைந்துள்ளது. உடுப்பியிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் மங்களூரிலிருந்து 81 கி.மீ தூரத்திலும் இது இருக்கிறது. NH 17 நெடுஞ்சாலை வழியாக மிகச்சுலபமாக இந்த ஸ்தலத்தை அடையலாம்.
பெங்களூரிலிருந்து நேரடியாகவே சாலிகிராம ஸ்தலத்துக்கு பஸ் வசதிகள் உள்ளன. இந்த யாத்ரீக ஸ்தலத்தை அடைந்த பின்னர் உள்ளூர் சுற்றுப்பயணத்துக்கு வசதியாக ஆட்டோ மற்றும் டாக்ஸி வசதிகள் இங்கு நிறைந்துள்ளன. தங்குமிட வசதிகள் மங்களூரிலும் உடுப்பியிலும் நிறைந்துள்ளன.



Click it and Unblock the Notifications