வாகமண் மலைவாசஸ்தலம் மூன்பாறா என்று அழைக்கப்படும் சூசைட் பாயிண்ட் (தற்கொலைப்பாறை) மலைக்காட்சி தளத்தையும் கொண்டுள்ளது. இது V வடிவில் அமைந்த ஒரு பயங்கரமான பாறைப்பிளவாகும்.
இங்கிருந்து கீழே பார்த்தால் படு ஆழத்தில் பள்ளத்தாக்கு நம் கண் முன்னே விரிகிறது. மயக்கம் வர வைக்கும் அதி பயங்கர ஆழமானது நம்மை முதல் பார்வையிலேயே மயிர்கூச்செரிய வைத்து விடுகிறது.
இது ஒரு அதல பாதாளம் போன்று காட்சியளிக்கிறது என்றும் சொல்லலாம். இந்த காட்சித்தளத்துக்கு சிரமமான மலையேற்றத்துக்குப்பின்னரே சென்றடைய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சிரமப்பட்டு இந்த காட்சி தளத்தை அடைந்தபின் நம்மை ஆட்கொள்ளும் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது வெகு கடினம்.
இயற்கை எனும் பிரம்மாண்டம் நம் மனத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தினால் உங்களையும் அறியாமல் உங்கள் கண்களில் நீர் வழியக்கூடும். அப்படி ஒரு அற்புதக்காட்சியும் சூழலும் இந்த சூசைட் பாயிண்ட் எனும் காட்சித்தளத்தில் அனுபவிக்க கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications