டொயாங் நதி நாகலாந்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய நதிகளுள் ஒன்றாகும். நகரத்திலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்நதி வோக்கா மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது.
இது உள்ளூர் பழங்குடியினரால் ட்சூ என்றும் ட்சூலூ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நதி ட்சூயி, டல்லோ மற்றும் இவற்றை விட பெரியதான டிஷி ஆகிய கிளை நதிகளைக் கொண்டுள்ளது.
இவை அனைத்தும் டொயாங் நதியுடன் சென்று கலக்கின்றன. இது மாவட்டத்தின் வடக்குப்புறத்தில் தோன்றி, கிழக்குப்புறமாகத் திரும்பி பின் முடிவாக சஜு நதியுடன் சேர்கிறது.
இந்நதி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
இந்நதி சஜூ நதியோடு இயைந்து, அதன் நீரோட்டத்தில் அமைந்துள்ள நிலங்களில் காய்கறிகள் மற்றும் வாழை, பைனாப்பிள், பப்பாளி போன்ற கனி வகைகளின் அமோக விளைச்சலுக்கு உதவி, அந்நிலங்களை வளமானதாக ஆக்குகிறது.
இந்நதிப் பள்ளத்தாக்கு, மனதை மயக்கும் காட்சிகளைக் கொண்டு இயற்கை விரும்பிகளை கட்டிப் போட்டு வைக்கக்கூடிய இடமாகக் காணப்படுகிறது. இந்நதி வோக்காவிலிருந்து சூன்ஹேபோட்டோ மாவட்டத்தினுள் நுழைந்து பின் அங்கிருந்து பிரவகித்து அஸ்ஸாம் பள்ளத்தாக்கின் தன்ஸிரி நதியுடன் சென்று கலக்கிறது.



Click it and Unblock the Notifications