Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள் » ஜஹாங்கீர் மஹால்

ஜஹாங்கீர் மஹால், ஆக்ரா

76

ஆக்ரா கோட்டை வளாகத்துக்குள் அமைந்துள்ள இந்த ஜஹாங்கீர் மஹால் 1570ம் ஆண்டு மாமன்னர் அக்பரால் ஒரு அந்தப்புர மாளிகையாக கட்டப்பட்டிருக்கிறது. அக்பரின் ராஜபுதன மனைவிகள் இதில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆக்ரா கோட்டைக்குள் அமர் சிங் நுழைவாயில் வழியாக  நுழையும்போது வலப்புரத்தில் முதல் மாளிகையாக இந்த ஜஹாங்கீர் மஹால் அமைந்திருப்பதைக் காணலாம்.

சிவப்புப்பாறைக்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனை இஸ்லாமிய மற்றும் ஹிந்து கட்டிடக்கலை அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. உள்கூடத்தை நோக்கி செல்லும் வாயிற்பாதையை சுற்றிலும் பெரிய தாழ்வாரங்கள் காணப்படுகின்றன.

இவற்றில் பாரசீக பாணி பாறைச்சிற்ப அலங்காரங்கள் காட்சியளிக்கின்றன. ஒரு முக்கியமான சிறப்பம்சமாக இந்த அரண்மனையின் சாரங்களை தாங்கும் பிடிப்பு அமைப்புகள் அலங்கார கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அரண்மனை பின்னாளில் ஜஹாங்கீர் மன்னரால் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மாளிகையின் உட்புறமும் வெளிப்புறம் வெவ்வேறு பாணியில் அமைந்திருப்பதிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம்.

இதில் ஒரு வட்டவடிவமான தடாகத்தையும் ஜஹாங்கீர் மன்னர் சேர்த்துள்ளார். இது ஜஹாங்கீர் ஹாஸ் என்று அழைக்கப்படுகிறது. அவரது காலத்தில் இந்த தடாகத்தில் வாசனை நீர் நிரப்பப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 May,Wed
Return On
07 May,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 May,Wed
Check Out
07 May,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 May,Wed
Return On
07 May,Thu