பதிண்டா கோட்டை அம்ரித்ஸர் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. பதிண்டா எனும் நகரத்தை நிர்மாணித்த பட்டி ராவ் என்பவரால் 1800 வருடங்களுக்கு முன்னால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.
பின்னர் இந்த கப்பல் வடிவ கோட்டை பாடியாலா மஹாராஜா ஆலா சிங் என்பவரால் 1745ம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. 10வது சிக்கிய குருவான் குரு கோபிந்த் சிங்ஜி இந்த கோட்டைக்கு விஜயம் செய்ததற்கான வரலாற்று குறிப்புகள் கிடைக்கின்றன.
இந்த விஜயத்தின் ஞாபகார்த்தமாக ஒரு குருத்வாரா ஒன்றும் கோட்டைக்கருகிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் பாலைவன மணல் சூழ்ந்திருக்க ஒரு கப்பல் போன்ற தோற்றத்துடன் இந்த கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது.



Click it and Unblock the Notifications