குருத்வாரா சாராகர்ஹி என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா சாராகர்ஹி யுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்த சீக்கிய வீரர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
1897ம் ஆண்டில் சாராகர்ஹி கோட்டையை காப்பாற்றுவதற்காக பதான் வம்சத்தினருடன் நடத்திய போரில் 21 சீக்கிய சிப்பாய்கள் உயிரிழந்தனர் என்பது இந்த குருத்வாராவிற்கு பின் உள்ள வரலாற்று பின்னணியாகும்
சர் சார்லஸ் பெவ்ஸ் எனும் அப்போதைய பஞ்சாப் கவர்னர் இந்த ஞாபகார்த்த குருத்வாராவை 1902ம் ஆண்டு திறந்து வைத்துள்ளார். குருத்வாராவின் சுவர்ப்பகுதியில் காணப்படும் சலவைக்கல்லால் ஆன நினைவுக்கல்வெட்டில் அந்த 21 சீக்கிய வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
சாராகர்ஹி கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களிலிருந்து இந்த குருத்வாரா சுவர்கள் கட்டப்பட்டுள்ளன என்பதும் ஒரு குறிப்பிடவேண்டிய தகவலாகும்.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 12ம் நாள் இந்த குருத்வாராவில் முன்னாள் ராணுவ வீரர்கள் வழிபாட்டிற்காக ஒன்று கூடுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இந்த குருத்வாராவுக்கு சுற்றுலாப்பயணிகளும் அவசியம் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications