மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம், அம்ரித்ஸர்

முகப்பு » சேரும் இடங்கள் » அம்ரித்ஸர் » ஈர்க்கும் இடங்கள் » மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம்

அம்ரித்ஸர் நகரில் உள்ள அழகான ராம்பாக் தோட்டப்பூங்காவில் இந்த மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் அமைந்துள்ளது. துவக்கத்தில் ராஜவம்சத்தினரின் கோடைக்கால மாளிகையாக விளங்கிய இந்த கட்டிடம் மஹாராஜா ரஞ்சித் சிங் உரிமையில் இருந்து பின்னர் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

தோட்டபூங்காவின் வாசலில் உள்ள ஒரு பிரம்மாண்ட வாசல் அமைப்பை கடந்து இந்த அருங்காட்சியக மாளிகையை சென்றடையலாம்.

இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு ஆயுதக்கருவிகள், புராதன நாணயச்சேகரிப்புகள் மற்றும் எழுத்துப்பிரதிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை முகலாயர் காலத்தை சேர்ந்தவையாகும்.

பஞ்சாப் பகுதியை ஆண்ட மன்னர்களின் அரண்மனைகள், அரசவைக்காட்சிகள், ராஜ வம்சத்தினரின் கூடார வாச காட்சிகள் போன்றவை சித்தரிக்கப்பட்டுள்ள வண்ண மை ஓவியங்களையும் இங்கு பார்க்கலாம்.

உலகப்பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரத்தின் மாதிரி வைரம் ஒன்றும், மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் பயன்படுத்திய முத்திரை பொதிக்கப்பட்ட பர்வானா ஒன்றும் இங்குள்ள இதர விசேஷமான காட்சிப்பொருட்களாகும்.

சீக்கிய இனத்தாரின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்த ஆழமான தகவல்களை அளிக்கும் இந்த அருங்காட்சியகம் தவறாமல் விஜயம் செய்யப்படவேண்டிய இடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

Please Wait while comments are loading...