சர்வதேச அளவிலான புகழை பரேலி நகரத்திற்கு தேடித்தந்துள்ள வரலாற்று சின்னமாக இந்த தர்க்கா இ அலா ஹஸாரத் அமைந்திருக்கிறது. நகரத்தின் சந்தடி நிறைந்த மொஹல்லா சௌதாக்ரான் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மசூதியானது புகழ் பெற்ற ஞானியான அலா ஹஸாரத் இமாம் அஹமத் ரஜா கான் என்பவரை கௌரவிக்கும் விதமாக கட்டப்பட்டிருக்கிறது.
1856-ம் ஆண்டு பிறந்த இந்த ஆன்மீக அறிஞர் அலா ஹஸாரத் எனும் பட்டத்தை அவரது காலத்தில் அளிக்கப்பெற்றுள்ளார். இஸ்லாமிய அன்மீக மரபுகளின் அறிஞராக அக்காலத்தில் இவர் விளங்கியுள்ளார். இஸ்லாமிய தத்துவங்களுக்காக ஒரு கல்வி மையத்தையும் இவர் உருவாக்கியுள்ளார்.
இந்த தர்க்கா வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த மையம் தற்போது சர்வதேச அளவில் இஸ்லாமிய மக்களின் யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள உருது, அரபிக் மற்றும் பாரசீக நூல்களை வாசிப்பதற்காக ஏராளமான ஆன்மீகப்பிரியர்கள் வருகை தருகின்றனர்.
இந்த ஞானியால் எழுதப்பட்ட முதல் நூல் ஃபதவா ரத்வியா என்பதாகும். இது 12 அத்தியாயங்களுடன் 12000 பக்கங்களை கொண்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் வாழ்நாளில் பின்பற்ற வேண்டிய அறங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications