பத்ராச்சலம் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பத்ராச்சல இராமர் கோயில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும், சீதா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இங்கு விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான நரசிம்ஹ மூர்த்தியையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதோடு சிவபெருமானுக்கும் இந்தக் கோயிலில் தனி சன்னதி ஒன்று உள்ளது.
பத்ராச்சல இராமர் கோயில் இராம பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் என்பதால் ஒவ்வொரு ராமநவமியின் போதும் இந்தக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதுமட்டுமல்லாமல் ராமநவமி மற்றும் தசரா பண்டிகைகள் இந்தக் கோயிலில் மிகவும் கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாக்களில் இராவணின் உருவ பொம்மையை எரித்து பக்தர்கள் குதூகலத்துடன் விழாவை நிறைவு செய்வார்கள்.



Click it and Unblock the Notifications