குண்டலா எனும் அழகிய கிராமம் பத்ராச்சலம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 258 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.
இந்த கிராமத்திலிருக்கும் வெப்ப நீரூற்றில் நீராட ஒவ்வொரு பனிக் காலத்திலும் படைக்கும் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு மற்றும் அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய மூவரும் வந்து செல்வதாக நம்பப்படுகிறது.
இதன் காரணமாக புனித யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் இந்த கிராமம் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நீரூற்றில் நீராடினால் சரும நோய்கள் குணமாகுமென்றும், பாவங்கள் தீருமேன்றும் பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது.



Click it and Unblock the Notifications