பத்ராச்சலம் நகரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஜடாயு பக்க என்ற புராணச் சிறப்பு வாய்ந்த பகுதி எடபக்க என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது.
ஹிந்து புராணத்தின் படி கழுகளின் ராஜாவான ஜடாயு, இராவணன் சீதா தேவியை கடத்திச் செல்லும் போது இந்த இடத்தில்தான் அந்த அசுரனை வழிமறித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது.
அதாவது இராவணன் தன்னை புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது சீதா தேவி எழுப்பிய அபயக் குரலைக் கேட்டு இராவணனுடன் ஜடாயு இந்த இடத்தில் போர் புரிந்தார்.
ஆனால் இந்த யுத்தத்தில் தோல்வியுற்ற ஜடாயுவின் இரு கைகளையும் இராவணன் வெட்டி வீழ்த்திவிட்டான். அந்த கைகளில் ஒன்று ஜடாயு பக்க இடத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேக்காபள்ளி என்ற இடத்தில் விழுந்ததாக கூறப்பபடுகிறது.
அதன் பிறகு சீதா தேவியை பற்றி விவரமறிய ஜடாயுவை சந்தித்த இராம பிரான் இராவணனுடன் நடந்த யுத்தத்தில் ஜடாயுவின் கைகள் வெட்டப்பட்ட செய்தியறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தார்.
இதனையடுத்து ஜடாயுவுக்கு அடிபட்ட பகுதிகளில் தன் கைகளை கொண்டு தடவிக் கொடுக்க ஜடாயுவின் காயங்கள் குணமானதாக புராணம் கூறுகிறது. மேலும் ஜடாயு பக்க பகுதி இந்த புராண முக்கியத்துவம் காரணமாக இந்தியா முழுவதுமிருந்து ஏராளமான யாத்ரீகர்களை ஈர்த்து வருகிறது.



Click it and Unblock the Notifications