கவர்ன்மெண்ட் மியூசியம் & ஆர்ட் கேலரி எனப்படும் இந்த முக்கியமான சுற்றுலா அம்சம் 10 வது செக்டாரில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தோற்றுவித்த பெருமை முழுதும் சண்டிகர் நகரத்தை வடிவமைத்த லெ கொர்புசியர் அவர்களையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கம்பீரமான கட்டிட அமைப்பின் உள்ளே ஒரு பெரிய பார்வையாளர் அறை, புனரமைப்பு ஆய்வுக்கூடம், வெளிக்கூடம், காப்பகப்பிரிவு, தற்காலிக காட்சிக்கூடம், கலையரங்கம் மற்றும் தேநீரகம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இதில் உள்ள பல்வேறு காட்சி மாடங்களில் காந்தார சிற்பங்கள், கற்கால படிமங்கள் மற்றும் எண்ணற்ற அருங்கலை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 6000 நூல்களை கொண்ட ஒரு ஆராய்ச்சி நூலகம் ஒன்றும் இதில் அமைந்துள்ளது.
புராதன கலை அம்சங்கள் மட்டுமல்லாமல் நவீன கால கலை அம்சங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால் இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை இந்த கவர்ன்மெண்ட் மியூசியம் & ஆர்ட் கேலரி வெகுவாக கவர்கிறது.



Click it and Unblock the Notifications