‘ஒளிந்து கிடக்கும் பள்ளத்தாக்கு’ என்ற பொருளை தரும் ‘ஹிட்டன் வேலி’ என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த பள்ளத்தாக்குப்பிரதேசம் சண்டிகர் நகரத்துக்கு வடமேற்காக 8 கி.மீ தூரத்தில் சிவாலிக் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
புகழ் பெற்ற மாதா ஜயந்தி தேவி கோயிலுக்கு அருகில் இந்த பள்ளத்தாக்குப்பிரதேசம் காணப்படுகிறது. சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உல்லாசம் போன்றவற்றிற்கு ஏற்ற இயற்கைச்சுற்றுலா ஸ்தலமாக இது அமைந்துள்ளது.
தூய்மை கெடாத இயற்கைச்சூழலின் நடுவே கயிற்றுக்குதிப்பு, மலை சைக்கிள் சவாரி மற்றும் கயிறு ஏற்றம் போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களில் இங்கு சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.
மேலும் கூடார வாசம், குடில் வாசம் போன்றவற்றிற்கான வசதிகளும் இந்த ஸ்தலத்தில் கிடைக்கின்றன. ஒட்டகம் அல்லது குதிரைச்சவாரி மூலம் இந்த பகுதியின் இயற்கை எழிலை பயணிகள் முழுமையாக ரசிக்கலாம்.
இவை தவிர இயந்திர சவாரி அமைப்புகள், சறுக்கு அமைப்புகள், ஊஞ்சல்கள் போன்ற அம்சங்களும் இங்கு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications