ரோஸ் கார்டன் இந்த பூங்காத்தோட்டம் 1967ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே இது போன்ற மிகப்பெரிய பூங்காத்தோட்டம் இதுதான் எனும் பெருமையை இது பெற்றுள்ளது.
ஜாகீர் ஹுசேன் ரோஸ் கார்டன் என்றும் அழைக்கப்படும் இந்த 17 ஏக்கர் பரப்பை கொண்ட பூங்காவில் 1600 வகைகளை சேர்ந்த 17000 ரோஜாச்செடிகள் வளர்க்கப்படுகின்றன.
ரோஜாச்செடிகள் மட்டுமல்லாமல் பலவித மூலிகை தாவரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. பாஹேரா, காம்பெர், பேல், ஹரார் மற்றும் மஞ்சள் குல்மொஹர் போன்றவை இவற்றில் அடக்கம்.
நன்கு பரமாரிக்கப்பட்டு வரும் இந்த தோட்டப்பூங்காவில் வருடந்தோறும் ‘ரோஜா திருவிழா’ எனும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த திருவிழா உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக உள்ளது.
மனம் மயக்கும் ரோஜா மலர்களால் ஜொலிக்கும் சண்டிகரின் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றான இந்த ரோஜாப்பூங்கா சுக்னா ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு நாளில் 5000 பார்வையாளர்கள் இந்த பூங்காத்தோட்டத்துக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications