கூர்க் மாவட்டத்தில் உள்ள குஷால் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் காணப்படும் இந்த ஸ்தலம் காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு ஆகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் மிக பிரசித்தி பெற்ற இந்த தீவு ஸ்தலம் 35 ஏக்கர் பரப்பளவில் ஒரு சூழல் பாதுகாப்பு பூங்காவாக விளங்குகிறது.
காவேரி ஆற்றை கடந்து இந்த தீவுக்குள் செல்வதற்காக 90 மீட்டர் நீளத்துக்கு ஒரு மரத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டம் கண்டுவிட்ட பழமையான பாலத்துக்கருகில் தற்சமயம் புதிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. மூங்கில் தோப்புகள், சந்தன மரங்கள், தேக்கு மரங்கள் மற்றும் ஆற்றின் இருபுறமும் தெரியும் அருவிகள் என்று இயற்கை அழகோடு இந்த சிறு தீவுப்பகுதி காட்சியளிக்கிறது.
இங்குள்ள வன விலங்கு சரணாலயம் பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாக விளங்குகிறது. இதில் மான்கள், யானைகள், முயல்கள் மற்றும் மயில்கள் போன்றவற்றை காணலாம்.
யானைச்சவாரி மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் இங்கு கிடைக்கின்றன. மூங்கில்களான மரவீடுகள்(மரத்தின் உச்சியின் கட்டப்பட்ட சிறு குடில்) மற்றும் வனத்துறையினரால் நடத்தப்படும் விருந்தினர் இல்லம் போன்றவை இந்த தீவில் உள்ளன.
இந்த தீவின் இயற்கை எழிலும் அமைதியான சூழலும் வித்தியாசமான பாலமும் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியா அனுபவத்தை கொடுக்கும் என்பது நிச்சயம்.



Click it and Unblock the Notifications