மடிக்கேரி மலை நகரத்தின் மையத்தில் இந்த ஓம்காரேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக 1820 ம் ஆண்டு ராஜா லிங்கராஜேந்திரா’வால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இஸ்லாமிய கட்டிடக் கலை அம்சங்கள் காணப்படுகின்றன. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்தின் போது இந்த பிரதேசத்தில் இஸ்லாமிய அம்சங்களும் சேர்ந்துள்ளன.
இந்த கோயிலின் மையத்தில் குமிழ் வடிவ கோபுரமும் நான்கு மூலைகளிலும் தூண் கோபுரங்களும் உள்ளன. ஒரு தர்காவை போன்றே காட்சியளிக்கும் இந்த கோயிலின் வாயிலில் சிவலிங்கமானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோயிலுக்கருகில் ஒரு குளமும் உள்ளது. குளத்தின் நடுவில் ஒரு மண்டபமும் அங்கிருந்து கோயிலுக்குள் செல்வதற்கான பாதையும் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சிவலிங்கம் மஹாராஜாவால் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இந்த கோயிலுக்கு ஓம்காரேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் ஒரு கதையும் சொல்லப்படுகிறது. அப்போதைய ராஜா அரசியல் லாபங்களுக்காக ஒரு பிராம்மணரை கொன்று விட்டதாகவும் அந்த பிராம்மணரின் ஆவி பிரம்ம ராட்சஸாக மாறி ராஜாவை துன்புறுத்தியதால் அந்த ஆவியை அடக்குவதற்காக வேண்டி காசியிலிருந்து சிவலிங்கம் எடுத்து வந்து அதை பிரதிஷ்டை செய்து இந்த கோயிலையும் உருவாக்கியதாக அந்த ஐதீக கதை சொல்லப்படுகிறது.
பஞ்சலோகத்தால் ஆன இந்த கோயிலின் முன் வாயிற் கதவுகளில் ஹிந்து ஐதீக எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஹிந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சம் இரண்டும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த கோயில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications