தண்டேலி பேருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள குல்கி எனும் கிராமத்தில் உள்ள இந்த குல்கி இயற்கை மையமும் குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த மையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காகவே வனப்பகுதியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இயற்கைச்சூழல் மத்தியில் பயணிகள் தங்கி ரசிக்கத்தக்கவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த மையத்திலுள்ள 12 கூடாரங்களில் பயணிகள் தங்களுக்கு தேவையான கூடாரங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பறவையின் பெயரால் அழைக்கப்படுகின்றன.
இங்கு தங்குவதற்கு தண்டேலி வனத்துறை அலுவலகத்தினை தொடர்பு கொண்டு முன் அனுமதி மற்றும் தங்கல் ஏற்பாடுகளை உறுதி செய்துகொள்ள வேண்டியுள்ளது. தண்டேலி காட்டுயிர் சரணாலயம் இந்த குல்கி இயற்கை மையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications