Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எம்போரியம்

சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எம்போரியம், டெல்லி

341

சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எம்போரியம் என்றழைக்கப்படும் இந்த விற்பனையகம் இந்தியாவின் பாரம்பரிய அழகுப்பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகளை உலகத்தின் கண்களுக்கு காட்சிப்படுத்தும் ஒரு நூதன சாளரம் என்றே சொல்லலாம்.

இது ஒரு சில கலை ஆர்வலர்களால் 1952ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனமாகும். வேறு பல கலைப்பொருள் அங்காடிகளும் நிரம்பியுள்ள பாபா கரக் சிங் மார்க் பகுதியில், ஜன்பத் பகுதிக்கு மிக அருகிலேயே இந்த ‘சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எம்போரியம்’ எனப்படும் அங்காடி வளாகம் அமைந்துள்ளது.

இந்த அங்காடியில் நாட்டின் பல பகுதிகள் மற்றும் மூலை முடுக்குகளிலிருந்தும் கொண்டு வரப்பட்டுள்ள அற்புதமான சிலைகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள், உலோக அழகுபொருட்கள், சாதனங்கள், நகைகள், கைவினைப்பொருட்கள், மூலிகைபொருட்கள், மரச்சாமான்கள், சுடுமண் பொருட்கள், கல் மற்றும் சலவைக்கல்லில் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் என்று ஏராளமான இந்திய பாரம்பரிய பொருட்கள் கிடைக்கின்றன.

அசலான நெசவுத்துணிகள் மற்றும் கைவினைப்பொருட்கள் கிடைப்பதால் இந்த எம்போரியம் உலகம் முழுவதுமே பெயர் பெற்று அறியப்படுகிறது. இந்த அழகுப்பொருட்களை உருவாக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கான வாழ்வாதாரமாகவும் இந்த எம்போரியம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தயாரித்து விற்பனை செய்வது மட்டுமல்லாமல் இந்த அழகுப்பொருட்களை பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப கலைப்பொருளை பரிசுப்பெட்டிக்குள் அடைத்து தரும் சேவையையும் இது அளிக்கிறது.

இந்த எம்போரியத்தில் கிடைக்கும் ஒவ்வொரு கலைப்பொருளும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்ததாக இருப்பதே இதன் சிறப்பம்சமாகும். இந்த அழகுப்பொருட்களில் தலைமுறை தலைமுறையாக வரும் கைவினை நேர்த்தியும், ஒவ்வொரு மண்ணுக்கே உரிய கலையம்சங்களும், கைத்திறன்களும், கலாரசனையும் மிளிர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்களுக்காக இந்த வளாகத்தில் சில கைவினைப்படைப்புகள் மற்றும் நெசவு உருவாக்கங்களை கைவினைக்கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற திறனாளிகள் காட்சி விளக்கமாக செய்து காட்டுவது பார்வையாளர்களை பரவசமூட்டும் மற்றொரு விசேஷமாகும்.

இந்த சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எம்போரியத்தின் கிளைகள் மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் கல்கொத்தா போன்ற மாநகரங்களிலும் இயங்குகின்றன. பல முக்கியஸ்தர்களையும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வருகை தரும் பல வெளிநாட்டு அதிபர்கள், தூதர்கள், அதிகாரிகள் போன்றவர்களையும் இந்த சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எம்போரியம் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய தகவலாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed