Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா

நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா, டெல்லி

341

NSD என்றழைக்கப்படும் இந்த நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா அல்லது தேசிய நாடகப்பள்ளி இந்திய பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும்.

1959ம் ஆண்டு சங்கீத் நாடக அகாடமியால் துவங்கப்பட்ட இந்த நாடகப் பயிற்சிக்கல்லூரி பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்ட கல்வி ஸ்தாபனமாக தற்போது வளர்ந்துள்ளது.

நன்கு திட்டமிடப்பட்ட பயிற்றுவிப்பு முறைகள், பாடத்திட்ட அமைப்புகள் மூலம் இங்கு மாணவர்கள் நாடகக்கலையின் எல்லா நுணுக்கங்களையும் கற்று தேர வைக்கப்படுகின்றனர்.

இந்த கல்லூரியில் பெறும் பயிற்சிக்காலத்தின் முடிவில் ஒவ்வொரு மாணவரும் தாமே ஒரு நாடகத்தை இயக்கி நடித்து பார்வையாளர்கள் முன் அரங்கேற்ற வேண்டும் என்பது குறிப்பத்தக்கது.

இப்படி கடுமையான ஆழமான பயிற்சியை பெறும் மாணவர்கள் முற்றிலும் தனித்தன்மையான திறமையுடன் முழுமையான படைப்பாளிகளாக மாற்றப்பட்டு வெளி வருகின்றனர்.

NSD ஸ்தாபனத்தின் இரண்டு நிகழ்த்துகலை பிரிவுகளாக ‘ரெபர்டரி கம்பெனி’ மற்றும் ‘சன்ஸ்கார் ரங் டோலி’ அல்லது ‘தியேட்டர் இன் எடுகேஷன்’ என்று அழைக்கப்படும் இரண்டு தனி அமைப்புகள் இயங்குகின்றன.

1964ம் ஸ்தாபிக்கப்பட்ட ‘ரெபர்டரி கம்பெனி’ நாடகத்தயாரிப்பு பணிகள், நாடகவிழா அமைப்புகள், பழைய மற்றும் புதிய நாடகங்களை உருவாக்குவது போன்ற பொறுப்புகளை ஏற்றுள்ளது.

1989ம் ஆண்டு துவங்கப்பட்ட ‘தியேட்டர் இன் எஜுகேஷன்’ பிரிவானது ஆசிரியர்களாக மாறிய நாடக நடிகர்களை கொண்டு இளம் மாணவர்களுக்கான நிகழ்த்து கலைகளை தயாரித்து அரங்கேற்றும் நோக்கத்தை கொண்டுள்ளது.

இந்த பிரிவு பொதுவாக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு வித்தியாசமான நாடகப்படைப்புகளை வெவ்வேறு மாணவப்பருவங்களுக்கேற்ற வகையில் உருவாக்குகிறது. இவற்றை ஜஷின் இ பச்பண் மற்றும் பால் சங்கம் போன்ற  நாடகத்திருவிழாக்களின் மூலம் அரங்கேற்றவும் செய்கின்றது.

NSD கல்லூரி தனக்கான பிரத்யேக பதிப்பக பிரிவையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாடகக்கல்லூரிக்கான நூல்கள் அச்சிடப்படுவதோடு நாடகக்கலை குறித்த பத்திரிகை வெளியீடுகள், புத்தகங்கள் போன்றவற்றையும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடுகிறது.

பாரத் ரங் மஹோத்சவ் எனும் பிரசித்தமான நாடகத்திருவிழாவை NSD அமைப்பு வருடாவருடம் வெகுசிறப்பாக டெல்லியில் நடத்தி வருகிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நாடத்திருவிழாவாக கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed