Search
  • Follow NativePlanet
Share

பைசாபாத் - புராணப் பிரதேசத்தில் ஒரு சுற்றுப்பயணம்!

20

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள `பைசாபாத்', கங்கை நதியின் துணை நதியான `காக்ரா' வின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். நடுத்தர அளவிலான, நன்கு வளர்ச்சியடைந்த இந்த நகரம் வங்காளத்தின் நவாப்பான, `அலி வர்டி கான்' என்பவரால் 1730ம் ஆண்டு நிறுவப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, இது `சுஜா-உத்-தெளலா' என்பவரால் `அவாத்' பிரந்தியத்திற்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் கீழ் தழைத்தோங்கிய, பைசாபாத் இன்றும் அதன் வண்ணமயமான கடந்த காலத்தை பெருமையுடன்  தன் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகிறது.  நவாப்புகளின் ஆட்சிக் காலத்தில் இங்கு கட்டப்பட்ட பிரகாசமிக்க மற்றும் கலைநயத்துடன் கூடிய கட்டிடங்கள் இன்றும் அவர்களின் பெருமையை பறை சாற்றிகொண்டிருக்கின்றன.  

பைசாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

பைசாபாத்தில் ஏராளமான சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவற்றுள் பைசாபாத் அருங்காட்சியகம் மற்றும் கல்கத்தா கோட்டை போன்றவை மிக முக்கியமானவை.

மொகலாயர்களின் காலத்தை சேர்ந்த பஹு பேகம் கா மக்பாரா மற்றும் மோடி மஹால் போன்ற முகலாய நினைவுச்சின்னங்கள் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்கிறது.

இங்குள்ள ரிஷபதேவ் ராஜ்காட் உதயன் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுது போக்கு வசதிகளை வழங்குகிறது. இங்குள்ள குப்டார் காட், இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும்.  ராமர் இங்கிருந்தே ஜல சமாதி அடைந்து விஷ்ணுவின் அம்சத்துடன் ஒன்றரக் கலந்தார் என நம்பப்படுகிறது.

பைசாபாத்தை எவ்வாறு அடைவது?

பைசாபாத் நகரம் ரயில் மற்றும் சாலை மூலம் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இந்நகருக்கு மிக அருகில் லக்னோ விமான நிலையம் உள்ளது.

பைசாபாத்தை பார்க்க சிறந்த பருவம்

பைசாபாத்தை பார்க்க நவம்பர் முதல் மார்ச் வரையிலான ஐந்து மாதங்களே மிகவும் சிறந்தது.

பைசாபாத் சிறப்பு

பைசாபாத் வானிலை

சிறந்த காலநிலை பைசாபாத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பைசாபாத்

  • சாலை வழியாக
    பைசாபாத் நகரம் உத்திரபிரதேச மாநில போக்குவரத்து கழகம் பேருந்துகள் மூலம் அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு இயக்கப்படும் சொகுசு பேருந்துகளில் கட்டணம் சற்று அதிகம் எனினும் அது பிற பேருந்து சேவைகளை விட வசதியாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பைசாபாத் ரயில் நிலையம் தில்லி, லக்னோ, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பைசாபாத்தின் அருகாமை விமான நிலையமாக லக்னோ விமான நிலையம் அறியப்படுகிறது. இது பைசாபாத்திலிருந்து 145 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue