Search
  • Follow NativePlanet
Share

கிர்னார் - கடவுளின் பள்ளத்தாக்கு

15

கிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை பற்றி வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்திலும் கிர்னாரை பற்றி செய்திகள் உள்ளன. இது ஒரு புனித ஸ்தலமாக இருப்பதற்கு இதுவே சான்றாகும்.

ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்கள்

கிர்னார் மலை தொடர்ச்சியில் ஐந்து உச்சிகள் உள்ளன. இங்கே பல ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்கள் அமைந்திருக்கின்றன. இந்த கோவில்களை அடைய பக்தர்கள் பல ஆயிரம் படிகள் மேலே ஏற வேண்டும்.

தீர்தன்காரா நேமிநாத் கோவில், மல்லிநாத் கோவில்,ரிஷபதேவ் கோவில் மற்றும் பர்ஸ்வனத் கோவில் ஆகியவைகள் புகழ் பெற்ற ஜெயின் கோவில்களாகும்.

பாவ்நாத் மகாதேவ் கோவில், தட்டாரேயா கோவில், அம்பா மாதா கோவில், காளிகா  கோவில், ராம்சந்திர கோவில், ஜடாஷங்கர் மகாதேவ் கோவில் மற்றும் கௌமுகி கங்கா கோவில் ஆகியவைகள் இப்பகுதியில் அமையப்பெற்றுள்ள முக்கிய ஹிந்து கோவில்கள். இது போக ஹனுமான் தாரா என்ற ஓடையும் கிர்னார் மலையின் மேற்கு திசையில் உள்ளது.

கிர்னார் மலையின் ஐந்து உச்சிகள்

கிர்னார் மலையின் ஐந்து உச்சிகள் இந்த்ச வரிசையில் தான் உள்ளன. முதல் உச்சியில் நேமிநாத் கோவிலை தொடர்ந்து அம்பா மாதா கோவில் உள்ளது. இரண்டாவது உச்சியை குரு கோராக்நாத் உச்சி என்று அழைப்பார்கள்.

மூன்றாவது உச்சிக்கு ஓகாத் உச்சி என்று பெயர். நான்காவது உச்சியில் தட்டாரேயா கோயிலும், கடைசி உச்சியில் காளிகா கோயிலும் அமையப்பெற்றுள்ளன.

கிர் தேசிய பூங்கா

கிர்னார் காட்டிற்கு அருகில் கிர் தேசிய பூங்கா உள்ளது. கிர்னார் மலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக கிர் காட்டையும் சுற்றி பார்க்க வேண்டும்.

வானிலை

கோடைக்காலத்தில் காலை வேளைகளில் வானிலை ஈரப்பதத்துடன் இருக்கும். மதிய வேளைகளில் அவ்வளவு வெப்பம் இருக்காது. வெப்பத்தை தவிர்க்க அதிகாலையிலேயே மலை மீது ஏற ஆரம்பித்து விட வேண்டும்.

செப்டம்பர் முதல் நவம்பர் வரை மற்றும் பிப்ரவரி மாதங்கள் தான் இங்கு வருவதற்கு உகந்த பருவமாகும். டிசம்பர் மாத விடுமுறையில் அதிக பயணிகள் இங்கே வருவதால் இம்மாதமே கிர்னாரில் உச்சபட்ச சீசன் காலம்.

போக்குவரத்து

கிர்னார் மலை ஜுனகத் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. இங்கே இரயில் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக வந்தடையலாம். இங்கிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள கேஷோத் விமான நிலையம் அல்லது 100 கி.மீ. தூரத்தில் உள்ள ராஜ்கோட் விமான நிலையம் மூலியமாகவும் இங்கே வரலாம்.  

கிர்னார் என்பது ஒரு புனித ஸ்தலம். இது வன விலங்குகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. இப்படி பல வகையான அனுபவத்தை ஒரே சுற்றுலாவில் பெற வேண்டுமானால் கிர்னாருக்கு வாருங்கள்!

கிர்னார் சிறப்பு

கிர்னார் வானிலை

சிறந்த காலநிலை கிர்னார்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கிர்னார்

  • சாலை வழியாக
    கிர்னார் மலையடிவாரத்தில் ஜுனகத் என்ற இடம் இருப்பதால், இந்த மலையை ஜுனகத்திலிருந்து சுலபமாக அடையலாம். குஜராத்தின் அனைத்து முக்கிய நகரத்திலிருந்தும் ஜுனகத்துக்கு பேருந்து வசதிகள் உள்ளன. ஜுனகத்துக்கு செல்ல குளிர் சாதன வசதி உள்ள பேருந்துகள் இல்லையென்றாலும், செமி-டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகள் அகமதாபாத், சூரத், வல்சாத் மற்றும் மும்பையிலிருந்து இயங்குகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கிர்னாருக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் 5 கி.மீ. தூரத்தில் ஜுனகத்தில் உள்ளது. இங்கிருந்து குஜராத்திலுள்ள இடங்களுக்கும் பிற மாநிலத்திலுள்ள நகரங்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளன. இரயில் பயணச் சீட்டின் விலை குறைவாக இருந்தாலும், பயணச் சீட்டை முன் கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கிர்னாருக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம், ஜுனகத்திலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராஜ்கோட்டில் உள்ளது. இங்கிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு சீரான விமான சேவைகள் உள்ளன. கிர்னாருக்கு மிக அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் அகமதாபாத் விமான நிலையமாகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun