பிரசித்தமான இந்த மஹா கணபதி கோயில் கோகர்ணாவில் மஹாபலேஷ்வர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. ராவணனை சாமர்த்தியமாக ஏமாற்றி ஆத்மலிங்கத்தை காப்பாற்றியதற்காக கணபதி கடவுளைக் கொண்டாடும் வகையில் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஐதீகத்தின்படி பக்தர்கள் மஹபலேஷ்வர் கோயிலுக்கு செல்லும் முன் இந்த கணபதி கோயிலுக்கு வருகை தந்து வணங்குவது வழக்கமாக உள்ளது. இந்தக்கோயிலில் உள்ள 1.3 மீட்டர் உயரமுள்ள கருங்கல்லால் ஆன கணேஷா சிலை பக்தர்கள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. சிவபெருமான் கணபதிக்கு முதல் தரிசனத்தை வரமாக அருளியுள்ளதால் பக்தர்கள் முதலில் கணபதியை தரிசிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications