ஷிமோகா மாவட்டத்தில் சாகரா நகரத்துக்கு அருகில் உள்ளது இந்த இக்கேரி எனும் ஊர். இக்கேரி என்றால் இரு தெருக்கள் என்பது பொருளாகும். ஷிமோகா மாவட்டத்துக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இந்த ஊர் 1560 -1640 ம் ஆண்டுகளில் கேலடி தளபதிகளின் தலைநகரமாக விளங்கியுள்ளது.
அகோரேஷ்வரா கோயில் இந்த ஸ்தலத்தின் விசேஷ அம்சமாகும். இது கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சாளுக்கிய, திராவிட, ஹொய்சள, தக்காண சுல்தானிய மற்றும் விஜயநகர கட்டிட கலை அம்சங்கள் கலவையாக காணப்படுகின்றன.
இந்த கோயில் சுவர்களில் வெகு நுட்பமாக வடிக்கப்பட்ட மன்மதக்கலை சிற்பங்கள், யானைச்சிற்பம், பழைய கன்னட கல்வெட்டு குறிப்புகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. கோயிலின் மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு வாசல்களில் அலங்கார வாயில் அமைப்புகள் காணப்படுகின்றன.
வடக்கு வாசல் இருபுறம் இரண்டு யானை சிலைகளுடன் காட்சியளிக்கின்றது.பயணிகள் இந்த கோயிலில் பைரவர், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமண்யா மற்றும் கணேசர் சிலைகளைக்காணலாம். தற்சமயம் இந்த அகோரேஷ்வரா கோயில் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.



Click it and Unblock the Notifications