ஹொன்னேமரடு பிரதேசத்தில் உள்ள மற்றொரு சுற்றுலாத்தலமான இந்த சிங்கண்டூரு இங்குள்ள சௌடேஷ்வரி அம்மன் கோயிலுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த புராதன நகரத்தில் எந்தவிதமான வியாபார ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் இந்த கோயில் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
சௌடேஸ்வரி தெய்வம் திருட்டு, கொள்ளை போன்ற தீய சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பதாக உள்ளூர் நம்பிக்கை நிலவுகிறது.இந்த சௌடேஸ்வரி அம்மன் கோயில் அளவில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. இங்கு சங்கராந்தி பண்டிகையின்போது ஜாத்ரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இக்காலத்தில் அதிக அளவில் பயணிகள் சிங்கண்டூரு நகருக்கு வருகை தருகின்றனர். இந்த கோயிலை தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் நுழைவுச்சீட்டு வாங்கி வரிசைப்படி நுழைய வேண்டுமென்பது முக்கியமான தகவலாகும்.
இந்த கோயிலை அடைவதற்கு பயணிகள் ஷரவதி ஆற்றையும் வனப்பகுதியையும் கடக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications