Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » சார்மினார்

சார்மினார், ஹைதராபாத்

8

1591 ம் ஆண்டில் முஹம்மத் குலி குதுப் ஷாஹி மன்னரால் கட்டப்பட்ட சார்மினார் என்ற இந்த கலையம்சம் நிரம்பிய நினைவுச்சின்னம் இன்று வரை மெருகு குறையாமல் ஹைதராபாத் நகரின் முக்கிய அடையாளமாக வீற்றிருக்கிறது.

ஹைதராபாத் எனும்போதே ‘சார்மினார்’ என்ற பெயரையும் சேர்த்து சொல்லும்படியாக சர்வதேச அளவிலும் இது புகழ்பெற்றுள்ளது. சார்-மினார் எனும் பெயருக்கு நான்கு கோபுரங்கள் என்பது பொருளாகும்.

கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த நுணுக்கமான கட்டமைப்பு அக்கால கட்டிடக்கலை மஹோன்னதத்தின் சாட்சியாக வீற்றுள்ளது. ராஜரீக வேலைப்பாட்டுடன் கூடிய விதான அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ள நான்கு அழகிய குமிழ் கோபுரங்களை இது கொண்டுள்ளது.

கோல்கொண்டாவிலிருந்து ஹைதராபாத்துக்கு தனது தலைநகரை மாற்றிக்கொண்டபிறகு இந்த சார்மினார் விதான வளைவை முஹம்மத் குலி குதுப் ஷாஹி கட்டியுள்ளார்.

பிளேக் போன்ற ஒரு கொடிய நோயின் பிடியிலிருந்து நகர மக்களை காப்பாற்றியதற்காக தெய்வ சக்திகளுக்கு நன்றி கூறும் விதமாக இது நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் பழமையான தோற்றத்துக்காகவும் வரலாற்று முக்கியத்துவத்துக்காகவும் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த நினைவுச்சின்னத்தை பார்த்து ரசிக்க வருகை தருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed