Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

153

ஹைதராபாத் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி - சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்புத்தளமாக மட்டுமல்லாமல் பிக்னிக் சுற்றுலா, பார்ட்டி கொண்டாட்டம், தனியார் நிறுவன நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், சாகச கேம்ப்’கள், மாநாடுகள் மற்றும் தேனிலவுப்பயணம் என்று பலதரப்பட்ட தேவைகளுக்கேற்ற ஸ்தலமாக மாறியுள்ளது.

சினிமாபடப்பிடிப்புக்கான மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகமாக ‘கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ பட்டியலில் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புக்கு தேவையான எல்லாவித உபகரணங்களையும் இயந்திர அமைப்புகளையும் இந்த படப்பிடிப்பு வளாகம் கொண்டுள்ளதால் படத்தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதிக அளவில் இந்த வளாகத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

நல்லதொரு திரைக்கதையுடன் இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நுழைந்தால் போதும் திரும்பிவரும்போது திரையிடத்தயாரான படத்துடன் திரும்பலாம். மேலும் படப்பிடிப்புக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கான ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நிறைந்துள்ளன.

உல்லாச சவாரி அமைப்புகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகின்றன. ஷாப்பிங் வசதிகளும் உணவகங்களும் கூட இங்கு அமைந்துள்ளதால் ஒரு முழுமையான பொழுதுபோக்கு தலமாக ராமோஜி ஃபிலிம் சிட்டி காட்சியளிக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat