Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » மெக்கா மஸ்ஜித்

மெக்கா மஸ்ஜித், ஹைதராபாத்

153

ஹைதராபாத் நகரில் உள்ள பழமையான மசூதிகளின் ஒன்று என்ற பெருமையை மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இந்த மெக்கா மஸ்ஜித் பெற்றுள்ளது.

முஸ்லிம்களுக்கான ஆன்மிக திருத்தலமாக மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க வரலாற்றுப்பின்னணியையும் பெற்றுள்ளதால் இந்த மசூதி மாநில அரசாங்கத்தால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படுகிறது.

சார்மினார் மற்றும் சௌமொஹல்லா அரண்மனை போன்ற இதர முக்கியமான அம்சங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் இந்த மசூதிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் விஜயம் செய்கின்றனர்.

முஹம்மத் குலி குதுப் ஷா இந்த மசூதியின் நிர்மாணத்தை 16ம் நூற்றாண்டில் துவங்கியுள்ளார். மெக்காவிலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணைக்கலந்து இந்த மசூதி கட்டுவதற்கான கற்கள் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக இந்த விசேஷ கற்கள் மசூதியின் மையப்பகுதியின் உள்ள அலங்காரவளைவை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த மசூதியை மையப்படுத்தியே தனது சாம்ராஜ்யத்தை முஹம்மத் குலி குதுப் ஷா விரிவுபடுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மசூதியின் முன்பகுதியில் உள்ள அறை மிக விசேஷமாக கருதப்படுகிறது. இறைத்தூதர் நபியின் தலைமுடி இந்த அறையில் பாதுகாக்கப்படுவதாக ஐதீகம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun