கல்சியில் உள்ள இந்த கல்வெட்டில் மெளரிய அரசனான அசோகனுடைய 14-வது அரசாணை பொறிக்கப்பட்டுள்ளது. அரசானை என்பது அடிப்படையில் அரசனின் மாற்றம்செய்யப்பட்ட ஆணைகளும் அறிவுறைகளும் அடங்கிய தொகுப்பாகும்.
இப்பாறை ஜான் பாரஸ்ட் என்பவரால் 1860 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இதிலுள்ளவை பிராமி எழுத்தக்களால் ஆன பிராகிருத மொழியில் செதுக்கப்பட்டுள்ளன. பத்தடி உயரமும் எட்டடி அகலமும் கொண்ட கட்டமைப்பு அடங்கிய இந்த கல்வெட்டு இந்திய கல்வெட்டியல் துறைக்கு கிடைத்த அரிய நினைவுச்சின்னம்.
பாறையில் ஒரு யானையின் உருவம் பொறிக்கப்பட்டு அதன் இரண்டு கால்களுக்கிடையில் ”கஜாதம்” என்று செதுக்கப்பட்டிருக்கும். ஆண்டியொகஸ், மாகுஸ், ஆண்டிகோனுஸ், தாலமி மற்றும் அலெக்ஸாண்டர் என்ற ஐந்து கிரேக்க அரசர்களின் பெயர்களை இக்கல்வெட்டு தாங்கியுள்ளதால் இது கிமு 253 ஆம் ஆண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.



Click it and Unblock the Notifications