Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » பேரளசேரி

பேரளசேரி, கண்ணூர்

84

பேரளசேரி எனும் இந்த சிறுநகரம் கண்ணூர் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ளது. கண்ணூர் –கூத்துபரம்பா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நகரத்தை சாலைமார்க்கமாக சுலபமாக சென்றடையலாம்.

பேரளசேரியின் முக்கியமான சுற்றுலா அம்சமான சுப்ரமணியா கோயில் கேரளா மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கிறது. சீதாதேவியை தேடி இலங்கை நோக்கி செல்லும்போது ராமபிரான் தன் தம்பி லட்சுமணனுடன் இந்த கோயிலில் வழிபட்டதாக ஐதீகக்கதைகள் சொல்லப்படுகின்றன.

முருகக்கடவுளுக்கான இந்த சுப்ரமண்யா கோயிலில் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் ஆன பாம்புச்சிலைகள் பிரசித்தமான அம்சங்களாக காட்சியளிக்கின்றன. இந்தக்கோயிலில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான படிக்கிணறு(குளம் போன்ற அமைப்பு) தென்னிந்தியாவிலுள்ள ஒரு முக்கியமான கட்டிடக்கலை அம்சமாகும்.

பிரமிக்க வைக்கும் இந்த கிணற்றின் தோற்றம் ராஜஸ்தானிய படிக்கிணறுகளை ஒத்திருக்கிறது. சீத்தங்கன் துள்ளல், சாக்யார்கூத்து, ஒட்டன்துள்ளல், கதகளி போன்ற பரவசமூட்டும் கேரள பாரம்பரிய நாட்டார்கலை நிகழ்ச்சிகளை இந்த கோயிலின் திருவிழாக்காலங்களில் கண்டு களிக்கலாம். இக்கோயிலுள்ள பாம்புத்தெய்வங்களுக்கு முட்டையை நைவேத்தியமாக வழங்கும் ‘முட்ட ஒப்பிக்கல்’ எனும் சடங்கு பின்பற்றப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue