பின்னர், இதன் பெரும் பகுதியை அந்த அரசர், `ஸ்ரீ சந்த் திவாரி' என்கிற குஜராத்தி பிராமணர் வசம் ஒப்படைத்தார். சுதந்திர போராட்ட காலத்தில் இப்பகுதிக்கு வருகை புரிந்த தேசத்தந்தை, `மகாத்மா காந்தி' இப்பகுதியின் அழகில் மயங்கி, கௌஸனியை `இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என வியந்து கூறியுள்ளார்.
அதனை மெய்பிக்கும் வகையில், ஆண்டு முழுவதும், ஏராளமான சுற்றுலா பயணிகள், கௌஸனியை சுற்றி பார்க்க, உலகம் முழுவதிலிருந்தும் வருகின்றனர்.
கௌஸனியில் அழகிய மலை மற்றும் மலைக்குன்றுகள் தவிர ஏராளமான ஆசிரமங்கள், கோயில்கள், டீ எஸ்டேட்கள் ஆகியன உள்ளன. இங்கு அமைந்துள்ள பிரபலமான `அனஸக்தி' ஆசிரமத்தில், மகாத்மா காந்தி, சில நாட்கள் தங்கி சென்றுள்ளார்.
தற்போது, இந்த ஆசிரமம், ஒர் உறைவிட பள்ளி, மற்றும் ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு, உறைவிட வசதிகளுடன் சமையலறை வசதிகளும் வழங்கப்படுகிறது.
அது `சுமித்ரா நந்தன் பந்த் கேலரி', என அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில், அவரின் கையெழுத்து பிரதிகள், கவிதைகள் மற்றும் அவரது இலக்கிய படைப்புகளுடன் அவர் பெற்ற விருதுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், அவருடைய பிறந்த நாள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்பொழுது, அவரின் நினைவாக ஒரு மாநாடு நடைபெறும்.
இதற்கு, `ஹவுரா' மற்றும்`லக்னோ' உள்ளிட்ட முக்கியமான இந்திய நகரங்களுடன் ரயில் இணைப்பு உள்ளது. கௌஸனி பஸ் நிலையம் நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களுடன் பொது மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களுக்கு கௌஸனியில் இனிமையான வானிலை நிலவுவதால், பயணிகள் இம்மாதங்களில் சுற்றுலா செல்வது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications