கேதார் மாசிப் எனும் இந்த இடம் கேதார்நாத், கேதார்நாத் கலசம் மற்றும் பரதேகுந்தா எனும் மூன்று மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 6000 மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த இடத்தின் வழியாகத்தான் பனிமலைகள் உருகி ஓடிவருகின்றன.
மந்தாகினி ஆறும் இவ்வழியாகத்தான் ஓடி வருகிறது. கேதார்நாத் மலையும் கேதார்நாத் கலசமலையும் ஒன்றோடொன்று ஒரு ஆழமான ஆற்றுப்பிளவால் இணைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடல் மட்டத்திலிருந்து 6831 மீ உயரத்தில் வீற்றிருக்கும் கேதார்நாத் மலைச்சிகரத்திற்கு மலையேற்றம் செய்வது ஒரு கடினமான சாகச சாதனையாகும். அதிக உயரம் காரணமாக இந்த மலையுச்சியில் ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருக்கும்.
கேதார்நாத் கோயிலுக்கு பின்னால் பரதேகுண்டாவை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதை வழியாக பயணிகள் மலையேற்றம் செய்யலாம். கேதார் மாசிப் பகுதியில் காணப்படும் பள்ளத்தாக்குப்பகுதியில் சோரபாரி தால் எனும் ஏரியும் அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications