பீஜாமண்டல் கோயில், கஜுராஹோ

கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் விதிஷா எனும் இடத்தில் இந்த பீஜாமண்டல் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் உச்சிப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள வெண்கற்கள் இந்த கோயிலை வித்தியாசமாக தோற்றமளிக்க வைத்துள்ளன.

முதல் பார்வையிலேயே இந்த கோயிலின் வடிவமைப்பு கிழக்காசிய கோயில்களை போன்ற தோற்றத்தினை கொண்டிருப்பது பார்வையாளர்களுக்கு விளங்கிவிடும்.

கோபுரம், பீட அமைப்பு மற்றும் அலங்கார நுழைவாயிற்பகுதிகளில் காணப்படும் நுணுக்கமான வடிப்புகள் எல்லாவகைகளிலும் கிழக்காசிய கோயிற்கலை பாணியை நினைவுறுத்துகின்றன.

இந்த கோயிலுக்கு அருகில் வசிக்கும் கிராமவாசிகள் கோயிலின் உள்ளே தினமும் விளக்கேற்றும் வழக்கத்தை நெடுங்காலமாக பின்பற்றி வருகின்றனர். ஆதிகாலத்தில் சிவன் மற்றும் பார்வதிக்கான கோயிலாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோயிலின் ஆதி வடிவம் தற்போது சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. மிச்சமிருக்கும் இடிபாடுகளிலிருந்தே இது சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சுவர்ப்பகுதியை கொண்டிருந்ததை உணரமுடிகிறது.

இவற்றில் மிருகங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கோயிலின் உட்புற சுவர்களில் பல்வேறு நிலைகளில் மனித உருவங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

Please Wait while comments are loading...