கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த பேணி சாகர் அணை ரம்மியமான குதார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. அணையும் சுற்றிலும் இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பி வழிவதால் கண்கவரும் வனப்புடன் இந்த அணைப்பகுதி காட்சியளிக்கிறது.
7.7 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள பேணி சாகர் அணை சுற்றுலாப்பயணிகளை கவரும் பல அம்சங்களை கொண்டுள்ளது. அமைதியான இயற்கைச்சூழலில் ஏகாந்தமாக பொழுதைக்கழிப்பதோடு படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடிப்பு மற்றும் நீச்சல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் இங்கு பயணிகள் ஈடுபடலாம்.
எனவே சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களும் அதிகம் விஜயம் செய்யும் ஒரு பிக்னிக் ஸ்தலமாக இந்த அணைப்பகுதி விளங்குகிறது. குறிப்பாக இயற்கை எழில் மற்றும் நீர் விளையாட்டு அம்சங்கள் பார்வையாளர்களை இங்கு ஈர்க்கின்றன.



Click it and Unblock the Notifications