பிரம்மாகோயில், கஜுராஹோ

நினோரா தால் எனப்படும் ஒரு பெரிய குளத்துக்கு அருகே இந்த பிரம்மாகோயில் அமைந்துள்ளது. இது 900 ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலின் உள்ளே பிரம்மா, விஷ்ணு மற்றும் இதர ஹிந்து தெய்வச்சிலைகள் காணப்படுகின்றன.

சதுர வடிவத்தில் அமைக்கப்பட்ட சிறிய கோயிலாக இந்த பிரம்மாகோயில் வீற்றிருக்கிறது. 12 கருங்கல் தூண்களின் மீது அமைந்த 11 அடி உயரம் கொண்ட மேடை போன்ற அமைப்பின்மீது எழுப்பப்பட்டுள்ள இந்த கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.

கோயிலின் மேற்கூரை அமைப்பு மாத்திரம் மணற்பாறையால் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்புற சுவர்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. கருவறை உள்ளே சிவலிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கோயிலின் கருவறை வாசலானது அடுக்கு நிலைப்படி வடிவமைப்புடன் காட்சியளிக்கிறது. இதிலிருந்து சிவபெருமான் அல்லது விஷ்ணுவுக்காக இந்த கோயில் ஆதியில் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.

Please Wait while comments are loading...