சௌஸத் யோகினி கோயில், கஜுராஹோ

சௌஸத் யோகினி கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். பழமையான இந்த கோயில் 875-900ம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது.

பெண் சக்தி கடவுளின் 64 யோகினி ரூபங்களுக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தனித்தன்மையான கலையம்சங்களுடன் இந்த கோயில் காட்சியளிக்கிறது. இந்த ஒரு கோயில் மட்டுமே உள்ளுர் கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளும் இக்கோயிலில் அதிகம் காணப்படவில்லை. கஜுராஹோவின் முத்திரையான சுவர்ச்சிற்பங்களும் இந்த கோயிலில் உருவாக்கப்படவில்லை.

மொத்தம் 67 சன்னதிகளை தன்னுள்ளே கொண்டிருக்கும் இந்தக்கோயிலில் 64 சன்னதிகளிலும் 64  யோகினி ரூபங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரிய அளவில் அமைக்கப்பட்டிருக்கும் சன்னதியில் மகிஷாசுரமர்த்தினி தெய்வம் வீற்றிருக்கிறது.

ஏனைய சன்னதிகளில் மத்ரிகாஸ் பிராமணி மற்றும் மஹேஷ்வரி போன்ற யோகினி வடிவங்கள் காட்சியளிக்கின்றன. கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் அமைந்துள்ள மிகப்புராதனமான கோயில்கள் இந்த சௌஸத் யோகினி கோயிலும் ஒன்று. இந்தியாவிலுள்ள மிகப்பழமையான யோகினி கோயிலாக இது அறியப்படுகிறது.

Please Wait while comments are loading...