ஜெயின் மியூசியம், கஜுராஹோ

ஜைனச்சிற்பங்கள் மற்றும் சிலைகளை பாதுகாத்து காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஜெயின் மியூசியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜைனக்கோயில் வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகம் 1987ம் ஆண்டு திறக்கப்பட்டிருக்கிறது.

வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இது சாஹு ஷாந்திபிரசாத் ஜெயின் கலா சங்க்ரஹாலயா என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஜைன சிலைகளும் சிற்பங்களும் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

100-க்கும் மேற்பட்ட சிலைகளை இந்த வட்டவடிவ அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் ரசிக்கலாம். 24 தீர்த்தங்கரர்கள், யக்ஷிகள் மற்றும் இதர ஜைன பாரம்பரியத்துக்குரிய சிற்பங்கள் இங்குள்ள சேகரிப்புகளில் அடங்குகின்றன.

இந்த ஜைன அருங்காட்சியகத்தின் நுழைவாயில் அமைப்பு கம்பீரமான் தோற்றத்துடன் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது. மகரதோரணம் எனப்படும் அலங்கார அமைப்பு இதன் வாயிற்படிகளின் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சேகரிப்புகள் பார்வையாளர்களை வெகுவாக வசீகரிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஜெயின் மியூசியம் மூடப்பட்டிருக்கும்.

Please Wait while comments are loading...