ஜவரி கோயில், கஜுராஹோ

கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் ரசித்து மகிழவேண்டிய மற்றுமொரு கலைப்படைப்பு இந்த ஜவரி கோயில் ஆகும். இது பிரம்மா கோயிலுக்கு அருகே கஜுராஹோ ஸ்தலத்தின் கிழக்குத்தொகுதி கோயில்களின் ஒரு அங்கமாக வீற்றிருக்கிறது.

அளவில் சிறியதாக இருந்தாலும் தனித்தன்மையான வடிவமைப்பு மற்றும் கலையம்சங்களோடு இந்த கோயில் வீற்றிருக்கிறது.  1075 – 1100 ம் வருடங்களில் மஹாவிஷ்ணுவுக்காக இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

புராதன கஜுராஹோ பாணி கலையம்சங்கள் இந்த கோயிலில் நிரம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. 11.8 மீ நீளமும் 6.4 மீ அகலமும் உடையதாக இந்த கோயில் காணப்படுகிறது.இக்கோயிலின் வெளிச்சுவர்களில் காணப்படும் அலங்கார சிற்ப வடிப்புகள் பரந்த அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இவற்றில் சிருங்கார காதற்கலை சித்தரிப்புகள் இடம் பெற்றுள்ளதே இதற்கு காரணம். பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ள இரண்டு தூண்களுடன் இந்த கோயிலின் நுழைவாயில் அமைப்பு காட்சியளிக்கிறது.

கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் மிக முக்கியமான படைப்பாக இந்த ஜவரி கோயில் பார்வையாளர்கள் மற்றும் கலாரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது.

Please Wait while comments are loading...