ஸ்டேட் மியூசியம் ஆஃப் டிரைபல் அன்ட் ஃபோக் ஆர்ட், கஜுராஹோ

முகப்பு » சேரும் இடங்கள் » கஜுராஹோ » ஈர்க்கும் இடங்கள் » ஸ்டேட் மியூசியம் ஆஃப் டிரைபல் அன்ட் ஃபோக் ஆர்ட்

ஸ்டேட் மியூசியம் ஆஃப் டிரைபல் அன்ட் ஃபோக் ஆர்ட் எனும் இந்த அருங்காட்சியகம் கஜுராஹோவில் சந்தேளா கல்ச்சுரல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைந்திருக்கிறது. அளவில் மிகப்பெரியதாக இல்லையென்றாலும் இங்கு பல அபூர்வமான புராதன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய நாகரிகத்தின் தொன்மை செழிப்பு உன்னதம் போன்றவற்றை எடுத்துக்காட்டும் பல்வேறு காலச்சான்றுகளை இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். அருகிலுள்ள வனப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் குறித்த பல அரும்பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பழங்குடி மக்களின் ஆதி நாகரிகம் மற்றும் வளர்ச்சி குறித்த சுருக்கமான வரலாற்று காட்சி அமைப்புகள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சுடுமண் பொருட்கள், உலோக பொருட்கள், பூர்வகுடி ஓவியங்கள் ஆகியவை இங்குள்ள காட்சிக்கூடங்களில் இடம் பெற்றுள்ளன.

கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியும் தவறவிடக்கூடாத ஒரு முக்கிய அம்சம் இந்த அருங்காட்சியகமாகும்.

Please Wait while comments are loading...