வாமனா கோயில், கஜுராஹோ

வாமனா கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் உள்ள கிழக்குத்தொகுதி கோயில்களில் அமைந்திருக்கிறது. இது 1050-1075ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட கோயிலாகும்.

மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்துக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. மற்ற கோயில்களிலிருந்து வேறுபட்டு காணப்படும் இந்த கோயிலில் பிரதக்ஷண மண்டபம் கிடையாது.

வடிவமைப்பில் இது ஆதிநாதர் கோயிலை ஒத்திருக்கிறது. ஷிகரா மற்றும் மஹாமண்டபம் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏனைய கஜுராஹோ கோயில்களை வெகுவாக ஒத்திருக்கும் இந்த கோயிலின் கருவறையில் வாமனர் சிலையை தரிசிக்கலாம்.

மேலும் கோயிலின் சுவர்ப்பகுதிகளில் ஆண் கடவுள்கள், பெண் கடவுள்கள் போன்ற தெய்வ உருவங்கள், அழகு மங்கையர் உருவங்கள் , புராணிக கதா பாத்திரங்களின் உருவங்கள் ஆகியவை வடிக்கப்பட்டிருக்கின்றன.

ரம்மியமான இயற்கை எழிற்பிரதேசத்தை பின்னணியில் கொண்டுள்ளதால் இந்த கோயில் மனதைக்கவரும் தோற்றத்தோடு காட்சியளிக்கிறது.

Please Wait while comments are loading...