கொச்சி கோட்டைப்பகுதியில் பரேடு மைதானத்துக்கு அருகில் உள்ள டேவிட் ஹால் என்றழைக்கப்படும் இந்த பாரம்பரிய மாளிகை டச்சு கிழக்கிந்திய கம்பெனியாரால் முற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த டேவிட் கோடர் எனும் யூத வணிகரின் நினைவாக இம்மாளிகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. 1695ம் ஆண்டில் கட்டப்பட்ட இது ‘ஹெண்ட்ரிக் வான் ரீடே’ எனும் டச்சு தளபதியின் இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவர் ‘ஹொர்ட்டஸ் மலபாரிகஸ்’ எனும் ஆவண நூலை தொகுத்தவர் ஆவார். சமீப காலத்தில் ‘ஜி.சி.ஹெச் எர்த்’ கம்பெனியால் இது ஒரு ஓவியக்கூடமாகவும் கஃபே’யாகவும் மாற்றப்பட்டுள்ளது.
317 வருடங்கள் பழமையை உடைய இம்மாளிகையானது தற்சமயம் ஓவியக்கண்காட்சிகள் நடத்துவதற்கும், கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications