ஹில் பேலஸ் எனப்படும் இந்த அரண்மனை மியூசியம் மாநிலத்திலுள்ள பழமையான தொல்லியல் மியூசியங்களில் ஒன்றாகும். இது கொச்சிக்கு அருகிலுள்ள திருப்புணித்துறா எனும் இடத்தில் உள்ளது.
1865ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையை கொச்சி ராஜாக்கள் தங்கள் காரியாலயமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த அரண்மனை வளாகத்தில் 49 கட்டிடங்கள் அடங்கியுள்ளன. அக்காலத்திய பாரம்பரிய மரபுப்படி கலையம்சங்களுடன் இவை நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு மான் பண்ணை, தொல்லியல் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர இந்த வளாகத்தினுள்ளே சில அரிய வாசனைப்பொருள் தாவரங்கள் மற்றும் மூலிகை வகைகளையும் பார்க்கலாம்.
கேரள மாநில தொல்லியல் துறையில் பராமரிப்பில் உள்ள இந்த வளாகம் அதன் பாரம்பரிய அழகு கெடாமல், மெருகுடன் அவர்களால் பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இங்குள்ள மியூசியம் மற்றும் அரண்மனை வளாகங்கள் பொது மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. ‘மணிச்சித்திரதாழு’ எனும் மலையாள சினிமாவின் சில காட்சிகள் இங்கு படப்பிடிப்பு செய்யப்பட்டன என்பது ஒரு குறிப்பிடத்தக்க தகவலாகும்.



Click it and Unblock the Notifications