Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » ஈர்க்கும் இடங்கள் » பரதேஸி சைனகாக்

பரதேஸி சைனகாக், கொச்சி

88

பரதேஸி சைனகாக் எனப்படும் இந்த யூத தேவாலயம் காமன்வெல்த் நாடுகளில் இருப்பவற்றிலேயே மிகப்பழமையானதாக கருதப்படுகிறது. அப்படி பழமையானவற்றில் இன்றும் இயங்கும் தேவாலயங்களில் ஒன்றாகவும் இது புகழ்பெற்றுள்ளது. 1568ம் ஆண்டில் மலபார் ‘யெகுதான்’ யூத சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் காலத்தின் தாக்குதல்களை தாங்கிக்கொண்டு இன்றும் சேதமடையாமல் காட்சியளிக்கிறது.

கொச்சிக்கோட்டையில் யூத குடியிருப்பு பகுதியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. பரதேஸி சைனகாக் தேவாலயத்தில் யூத ஆகம புனித நூலும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க கிரீடங்கள், வெண்கலத்தாலான பீடம் மற்றும் பெல்ஜிய கண்ணாடியாலான ‘சாண்டலியர் விளக்குகள்’ போன்றவற்றையும் இந்த தேவாலயம் கொண்டிருக்கிறது.

ஜோசப் ரப்பான் எனும் மதகுருவுக்கு வழங்கப்பட்ட செப்பு உரிமைப் பட்டயத்தையும் இங்கு பயணிகள் பார்க்கலாம். ஒரு வரலாற்று சாசனமான இந்த செப்புப்பட்டயம் தமிழில் எழுதப்பட்டிருப்பது வெகு ஆச்சரியமான ஒரு அதிசயமாகும்.

இந்த யூத தேவாலயம் புராதன கட்டிடக்கலையின் உன்னதமான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இங்கு தரைப்பகுதியில் கையால் வண்ணம் தீட்டப்பட்ட பீங்கான் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மிளிரும் கலையம்சமும் வேலைப்பாடும் தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றன. ஒரு கீழைத்தேச தரைவிரிப்பு ஒன்றும் இங்கு தரையில் விரிக்கப்பட்டிருக்கிறது. இது எதியோப்பிய நாட்டின் கடைசி பேரரசர் அன்பளிப்பாக அளித்தது எனும் தகவலும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Aug,Sat
Return On
09 Aug,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Aug,Sat
Check Out
09 Aug,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Aug,Sat
Return On
09 Aug,Sun