பாண்டவர்களுடன் தொடர்புடைய புராணிக பின்னணியை கொண்டிருக்கும் இந்த கோயில் வடக்கு தானேசர் பகுதியில் அமைந்திருக்கிறது. கௌரவர்களுடன் இறுதிப்போரில் ஈடுபடுவதற்கு முன்பாக இந்த கோயிலில் பாண்டவர்கள் விசேஷ பூஜைகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயிலிலில் காளி தேவியின் வெவ்வேறு அவதார ரூபங்களை பார்க்கலாம். ஹிந்து மரபுப்படி சக்தி பீடங்கள் எனப்படும் வழிபாட்டு தலங்கள் பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் அளிக்கும் சக்தி கொண்டவை என்ற நம்பிக்கை நிலவுகிறது.
சிவப்பு பாறைக்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக்கோயில் நவராத்திரி திருநாட்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. ஏராளமான யாத்ரீகர்கள் இந்த கோயிலில் வழிபடுவதற்காக வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications