குருக்ஷேத்ராவில் உள்ள யாத்திரை ஸ்தலங்களின் முக்கியத்துவத்தையும் வரலாற்றுப்பின்னணியையும் எடுத்துக்காட்டுவதற்காக ஹரியான மாநில அரசு இங்கு பல இடங்களில் ஒலி-ஒளிக்காட்சி சேவைகளை வழங்கும் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணா மியூசியம் மற்றும் ஜோதிஸார் ஸ்தலங்களில் இந்த காட்சிச்சேவைகள் பார்வையாளர்களுக்காக வழங்கப்படுகின்றன.
குருக்ஷேத்ராவில் பிரதான யாத்திரை அம்சமான ஜோதிஸார் ஸ்தலத்தில் ஒவ்வொரு மாலையும் இந்த ஒலி-ஒளிக்காட்சி சேவை திரையிடப்படுகிறது. குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்தபடி கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் காட்சி சிற்ப அமைப்பாக ஜோதிஸார் ஸ்தலத்தில் வடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பகவத் கீதையின் சிறப்பை குறிப்பிடும் அடையாள சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிற்ப அமைப்பு ஒரு பீடத்தளத்தின்மீது அமைக்கப்பட்டிருக்கிறது. 1967ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதியான சங்கராச்சாரியார் இதனை நிர்மாணிக்க செய்துள்ளார்.
இங்கு காண்பிக்கப்படும் ஒலி-ஒளிக்காட்சி சேவையில் மஹாபாரதத்தின் முக்கியமான சம்பவங்கள், கிருஷ்ணரின் பகவத் கீதையின் தத்துவங்கள் ஆகியவை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் விளக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications