மார்க்கண்டேஷ்வர் கோயில் குருக்ஷேத்ராவிலிருந்து 25 கி.மீ தூரத்தில் ஷபாத் மார்க்கண்டா எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் சிவபெருமான் தன்னை தஞ்சமடைந்த 12 வயது மார்க்கண்டேயனை யமனிடமிருந்து காப்பாற்றி சாகாவரம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
மஹாபாரத காலத்திற்கும் முந்தைய பழமையை உடைய கோயிலாக இது கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் ஜுலை ஆகஸ்ட் மாதங்களில் இந்த கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கிராண்ட் டிரங்க் சாலையில் அம்பாலா-டெல்லிக்கு இடையே அம்பாலாவிலிருந்து 20 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலின் சுவர்ப்பகுதியில் சிவன் மார்க்கண்டேயனை யமனிடமிருந்து காப்பாற்றும் காட்சி ஓவியமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications