நாபி என்பது தொப்புளையும் கமல் என்பது தாமரை மலரையும் குறிக்கிறது என்பதை சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இவை இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்பதில் இந்த ஸ்தலத்தின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.
அதாவது விஷ்ணுவின் தொப்புள் பகுதியிலிருந்து ஒரு தாமரை மலர் வடிவில் பிரம்மா அவதரித்தார் என்பது ஐதீக நம்பிக்கையாகும்.
நாபி கமல் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கோயில் குருக்ஷேத்ராவில் தானேசர் பகுதியில் அமைந்துள்ளது. விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய இருவரது சிலைகளையும் இந்த கோயிலில் தரிசிக்கலாம்.
சிறிய கோயில் என்றாலும் பிரம்மாவுக்கென அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களில் ஒன்று என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எல்லா கோயில்களையும்போல் இந்த கோயிலுக்கும் ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. பீஷ்மரின் தாகத்தை தணிக்க அர்ஜுனன் அம்பால் உருவாக்கிய நீருற்றே இந்த தீர்த்தக்குளம் என்பதாக சொல்லப்படுகிறது. நாபி கமல் கோயில் பெஹோவா- குருக்ஷேத்ரா சாலையில் தானேசரிலிருந்து ஒன்றரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications