ஓ.பி. ஜிண்டால் பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் இசை நீரூற்று அமைப்பு அவரது மகனான நவீன் ஜிண்டால் என்பவரால் அமைக்கப்பட்டிருக்கிறது.
இவர் குருக்ஷேத்ராவைச்சேர்ந்த தொழிலதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவரது தந்தை ஓ.பி. ஜிண்டால் ஹரியானாவின் மின் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் காணப்படும் இசை நீரூற்று வட இந்தியாவிலேயே மிகப்பெரியதாக சொல்லப்படுகிறது. பூங்காவின் உள்ளே காணப்படும் பிரத்யேக நந்தவனத்தில் ஓ.பி. ஜிண்டால் அவர்களின் மார்பளவு சிலை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. எல்லா வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பூங்கா வளாகத்தில் நிரம்பியுள்ளன.
குழந்தைகளுக்கேற்ற வண்ணமயமான ஊஞ்சல்கள், பெரியவர்களுக்கான விளையாட்டுப்பகுதி, பிக்னிக் பகுதி, முதியோர்களுக்கான வளாகம், வனவிலங்கு காட்சிக்கூடம், தியானப்பூங்கா, ஓட்டப்பயிற்சி பாதை மற்றும் ரோஜாத்தோட்டம் போன்ற ஏராளமான அம்சங்களை இந்த பூங்கா வளாகம் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் பிடித்தமான ஏதோ ஒரு அம்சம் இங்கு நிச்சயம் இருக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications