Search
  • Follow NativePlanet
Share

மலயாட்டூர் - இயற்கையோடு உறவாடும் கலாச்சார நகரம்!

14

கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மலயாட்டூர், மேற்கு தொடர்ச்சி மலைகளையும், பெரியார் நதியையும் இணைக்கும் இடமாக இருப்பதுடன், நிலம், நீர் மற்றும் மலை ஆகிய மூன்றும் சங்கமிக்கும் வித்தியாசமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

மலயாட்டூர் நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது ஏசுநாதரின் சீடர்களில் ஒருவராக அறியப்படும் செயின்ட் தாமஸுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்க தேவாலயமாகும்.

இந்த தேவாலயம் கிறிஸ்தவர்களின் யாத்ரீக மையமாக மட்டுமல்லாமல் அதன் கட்டிடக் கலை அற்புதத்துக்காகவும் பக்தர்கள் மற்றும் பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகிறது.

மலயாட்டூர் நகரில் செயின்ட் தாமஸ் தேவாலயத்தை தவிர சர்ச் ஆஃப் மேரி இமாக்குலேட், செயின்ட் செபாஸ்டியன் சர்ச் போன்ற தேவாலயங்களையும் நீங்கள் பார்க்கலாம். இவைதவிர மலயாட்டூர் நகருக்கு நீங்கள் வரும் போது துர்கா தேவி கோயில், மஹாகனி தோட்டம், மூலம்குழி உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வரலாம்.

மலயாட்டூர் நகரில் சிறிய உணவுக் குடில்கள் மற்றும் நிறைய குளம்பியகங்கள் உள்ளன. இங்கு நீங்கள் கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்கலாம். அதோடு திருவிழா காலங்களில் புனித யாத்ரிகர்களின் வசதிக்காக ஏராளமாக தற்காலிக உணவுக் குடில்கள் மலயாட்டூர் நகரில் திடீரென முளைக்கும்.

மலயாட்டூர் நகரம் கொச்சி நகரிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதுடன், அருகாமை நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. மலயாட்டூர் நகரின் மழைக் காலங்களில் கடுமையான மழைப் பொழிவு இருக்குமாதலால் பயணிகள் இந்த காலங்களில் மலயாட்டூர் நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது. எனினும் பனிக் காலம் மலயாட்டூர் நகரை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற பருவமாகும்.

மலயாட்டூர் சிறப்பு

மலயாட்டூர் வானிலை

சிறந்த காலநிலை மலயாட்டூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மலயாட்டூர்

  • சாலை வழியாக
    கொச்சியிலிருந்து, மலயாட்டூர் செல்ல தினமும் எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு கொச்சி நகரம் கேரளாவின் மற்ற பகுதிகளுடனும், தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களுடனும் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் கொச்சி நகரத்துக்கு வந்து சேர்ந்த பின்பு எளிதாக மலயாட்டூரை அடைந்து விட முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மலயாட்டூரின் அருகாமை ரயில் நிலையமாக எர்ணாக்குளம் ரயில் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி மலயாட்டூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மலயாட்டூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக மலயாட்டூரை அடைந்து விடலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu