மரவந்தேவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹட்டியங்காடி என்னும் சிறிய கிராமத்தின் வராஹி நதிக்கரையில் சரித்திர புகழ் வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது.
இது ஹிந்துக்களின் முக்கியமான புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று. இங்கு வரும் புனித யாத்ரிகர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது.இந்தக் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் அலுப்ப மன்னர்களால் கட்டப்பட்டது.
இதன் விநாயகர் சிலை சாலிகிராம கல்லால் செதுக்கப்பட்டு, இரண்டரை அடி உயரத்தில் ஏராளமான ஆபரணங்களுடன் மிக அழகாக காட்சியளிக்கிறது.
உலகத்திலேயே ஜடாமுடியுடன் கூடிய இடஞ்சுழி விநாயகர் சிலை இது மட்டுமே. தன்னுடைய வலது கையில் உள்ள பாத்திரம் முழுக்க மோதகங்களுடன் நின்று கொண்டிருக்கும் விநாயகர் சிலை ஒவ்வொரு ஆண்டும் ஓரங்குலம் வளர்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications