Search
  • Follow NativePlanet
Share

மோரி – டான்ஸ் பள்ளத்தாக்கின் நுழைவாயில்!

8

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்திலுள்ள உள்ள அழகிய கிராமம் மோரி. இந்த புகழ் பெற்ற சுற்றுலாதலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஜாவ்ன்சார் பவார் பகுதயில் டான்ஸ் (டாமஸ் நதி என்றும் அழைக்கப்படுகிறது) நதியின் கரையில் உள்ள இந்த கிராமம், 'டான்ஸ் பள்ளத்தாக்கின் நுழைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்து மத இதிகாசத்தில் வரும் புராண கால பாத்திரமான பூப்ருவாஹான் என்பவரின் கண்ணீரால் தான் டான்ஸ் நதி உருவானதாக சொல்லப்படுகிறது. அவருடைய கண்ணீர் இன்னமும் இந்த நதியில் கலந்து கொண்டிருப்பதாக கிராமத்தினர் நம்புவதால் அவர்கள் இந்த தண்ணீரை குடிப்பதில்லை.

எனினும், மற்றும் சிலர் இந்த நதி மற்றுமொரு இந்து மத இதிகாசமான இராமாயணத்தில் வரும் சூர்ப்பணகையின் கண்ணீரால் உருவானதாகவும் நம்புகிறார்கள்.

இந்த பகுதியில் வசிப்பவர் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களை தங்களுடைய மூதாதையர்களாக கருதுகின்றனர். அவர்கள் மகாபாரதத்தில் வரும் புரணா கால அரசர்கள் மற்றும் பாத்திரங்களாவர்.

மகாபாரதத்தில் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கௌரவர்களை உள்ளூர்வாசிகள் வழிபட்டு வருகின்றனர். கௌரவர்களில் மூத்தவரான துரியோதனுக்காக கட்டப்பட்ட, புகழ் பெற்ற துரியோதனர் கோவில், இங்குள்ள ஜாகோல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை சாவ்ர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கட்டியதாக நம்பப்படுகிறது.

ஆசியாவிலேயே மிகச்சிறந்த அடர்ந்த, பசுமையான பைன் மரக்காடுகளை கொண்டிருக்கும் இடமாக கருதப்படும் இந்த இடம் முகாம் அமைத்து தங்குவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.

பெருமளவிலான விடுதிகள் இங்கே முகாம் அமைத்து தங்குவதற்கான வசதிகளை நியாயமான விலைகளில் வழங்கி வருகிறார்கள். இந்த விடுதிகளில் வழங்கப்படும் போன்பையர் மற்றும் திறந்தவெளி விருந்துகள் ஆகியவை உங்கள் நினைவுகளை விட்டு என்றும் நீங்காது.

ஆங்க்லிங், ராஃப்டிங் மற்றும் கயக் விளையாட்டு போன்ற நீர் விளையாட்டுகளையும டான்ஸ் நதியில் விளையாட முடியும். பன்டார்பன்ச் சிகரத்திலிருந்து உற்பத்தியாகும் இந்த நதி, யமுனையின் மிகப்பெரிய துணையாறுகளில் ஒன்றாக இருக்கும்.

மலையேற்றம், ஜங்கிள் வாக், பாறைகளில் ஏறுதல் மற்றும் மலை உச்சியிலிருந்து இரு கயிறுகளை கொண்டு மட்டும் இறங்கும் ராப்பெல்லிங் போன்ற சாகச விளையாட்டுகளையும் மோரியில் விளையாட முடியும்.

மோரியை சுற்றுலாப் பயணிகள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் எளிதில் அடைந்திட முடியும். 175 கிமீ தொலைவில், டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் தான் மோரிக்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாகும்.

அதுமட்டுமல்லாமல், டேராடூன் இரயில் நிலையம் மோரிக்கு அருகிலுள்ள இரயில் நிலையமாக உள்ளது. அருகிலுள்ள நகரங்களிலிருந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த கிராமத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

மோரிக்கு சுற்றுலா வர திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த பகுதியை முழுமையாக சுற்றிப் பார்த்திட இயலும். மலையேற்றம் போன்ற விளையாட்டுகளுக்கு கோடைக்காலமும், கயக்கிங் போன்ற விளையாட்டுகளுக்கு மழைக்காலமும் ஏற்ற பருவங்களாக உள்ளன.

மோரி சிறப்பு

மோரி வானிலை

சிறந்த காலநிலை மோரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மோரி

  • சாலை வழியாக
    அருகிலுள்ள நகரங்களிலிருந்து தொடர்ச்சியான பேருந்து வசதிகளை மோரி பெற்றுள்ளது. மோரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    175 கிமீ தொலைவில் உள்ள டேராடூன் இரயில் நிலையம் தான் மோரிக்கு மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து மோரிக்கு செல்வதற்கான டாக்ஸிகள் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மோரியிலிருந்து 186 கிமீ தொலைவில் உள்ள டேராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் தான் மோரிக்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாகும். 410 கிமீ தொலைவில் உள்ள தலைநகரம் புது டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நேரடியாக இந்த கிராமத்திற்கு வர முடியும். இந்த விமான நிலையம் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் தொடர்ச்சியான விமான சேவைகளை இயக்கி வருகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் ஜாலி கிராண்ட் விமான நிலையத்திலிருந்து மோரிக்கு சென்று வர டாக்ஸிகளையும் அமர்த்திக் கொள்ள முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed